எங்களைப் பற்றி

கடின உழைப்பே புகழை ஈட்டித் தரும்

நாம் யார்

நோக்கமும் தாக்கமும்

டாக்டர் எம்ஜிஆர் பேச்சு மற்றும் காது கேளாதோர் இல்லம் மேல்நிலைப் பள்ளி ஆனது பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடு உடையோர் இலவசமாக பயின்று பயன்பெறும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தங்கும் இடம் உணவு சீருடை மற்றும் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. மாணவர்களின் பன்முக வளர்ச்சியை முன்னிட்டு அவர்களுக்கு வகுப்பறை பாடங்கள் மட்டுமல்லாமல் விளையாட்டு, கைவேலை, நடனம் போன்ற திறன்களை மேம்படுத்தும் வாய்ப்புகளும் அளிக்கப்படுகிறது யோகா, ஜிம்னாஸ்டிக், கிரிக்கெட் போன்ற திறன்களை வளர்க்கத் தக்க வல்லுனர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது அதுமட்டுமல்லாமல் அவர்களின் இயல் நாட்டத் திறன்களையும் ஆர்வங்களையும் கண்டறியும் வண்ணம் பேக்கிங், தையல், சமையல் ஒப்பனைகளை திரைஅச்சிடுதல் மற்றும் கைபேசியை பழுதுபார்த்தல் போன்ற அனைத்தையும் கற்றுக் கொள்ள வாய்ப்பளிக்கப்படுகிறது. டாக்டர் எம்ஜிஆர் பேச்சு மட்டும் காது கேளாதோர் இல்லம் மேல்நிலைப்பள்ளி 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் ஏழாம் நாள் தமிழ்நாடு அரசின் சமூக நலத்துரையால் அங்கீகரிக்கப்பட்டது. தற்போது மாநில மாற்றுத்திறனாளிகளுக்கான ஆணையர் அலுவலகத்தாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எமது இல்லத்தில் ஆரம்பக் கல்வி முதல் 12 ஆம் வகுப்பு வரை 166 மாணவர்கள் இலவசமாக பயின்று வருகின்றனர். இவர்களுக்கு தங்கும் இடம் உணவு சீருடை என அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது 30 ஆசிரியர்களும் 15 ஆசிரியர் அல்லாத பணியாளர்களும் தனது உயர் உழைப்பை வழங்கி வருகின்றனர் இல்லத்தில் 70 மாணவர்களும் மூன்று பயிற்சி ஆசிரியர்களும் தங்கி பயன் பெறுகின்றனர்.

99%
வெற்றி பெற்ற மாணவர்கள்: எங்களால் கற்பிக்கப்படும் உறுதியான மற்றும் பொருத்தமான கல்வி முறையால் 99% மாணவர்கள் தங்களுக்கு ஏற்படும் தடைகளை உடைத்து முழு திறனையும் வெளிப்படுத்தி வெற்றி வாய்ப்பை பெறுகின்றனர்.

புள்ளிவிவரங்கள்

அனுபவம் வாய்ந்த ஆண்டுகள்
4.4
பள்ளி மதிப்பீடுகள்:பள்ளி மதிப்பீடுகள். கல்வியில் சிறந்து விளங்குவதற்கும் காதுகேளாத சமூகத்திற்கான ஆதரவிற்கும் எங்கள் பள்ளி தொடர்ந்து சிறந்த மதிப்பீடுகளைப் பெறுகிறது.
speech

ஒரு தலையீட்டு மையத்தின் ஒட்டுமொத்த நோக்கம், குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு அதிகாரம் அளிப்பது, அவர்களுக்கு தேவையான கருவிகள் மற்றும் ஆதரவை அளித்து சவால்களை சமாளித்து சமூகத்தில் செழித்து வளர்வதாகும்.

ஆரம்பப் பயிற்சி மையம்

3 வயதிற்கு உட்பட்ட செவித்திறன் குறை உடைய குழந்தைகளுக்கான ஆரம்ப பயிற்சி மையம் காஞ்சிபுரத்தில் 2008 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது தற்போது 21 குழந்தைகள் பயின்று வருகின்றனர் எங்கு பயின்ற குழந்தைகளில் இதுவரை 35 குழந்தைகள் அரசு பள்ளிகளிலும் 17 குழந்தைகள் தனியார் பள்ளிகளிலும் கேட்கும் திறனுடைய மாணவர்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டு கல்வி பயின்று வருகின்றனர் செவித்திறன் பரிசோதனை செய்யும் வசதிகளுடன் கூடிய புற ஒலிப் புகா வண்ணம் வடிவமைக்கப்பட்ட ஆடியாலஜி அறையும் அதனோடு பேச்சு பயிற்சிக்கான மென்பொருளை பயன்படுத்தி பயிற்சி அளிக்கும் அறையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது‌.

பாலாஸ்ரீ விருது

பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு உயர்தர கல்வி மற்றும் மறுவாழ்வு வழங்குவதற்கும், நிறைவான வாழ்க்கையை நடத்துவதற்கு அவர்களுக்கு அதிகாரமளிப்பதற்கும் பள்ளி உறுதிபூண்டுள்ளது. பாலாஸ்ரீ விருது போன்ற மதிப்புமிக்க பாராட்டுகள் உட்பட தேசிய அளவில் பெற்ற அங்கீகாரம் இந்த நிறுவனத்தின் சிறப்பிற்கு ஒரு சான்றாகும். இந்த தேசிய கௌரவமானது படைப்பாற்றல் கலைகள் மற்றும் அறிவியலில் தனித்துவமான இளம் திறமையைக் கொண்டாடுகிறது, மேலும் முழுமையான வளர்ச்சியை வளர்ப்பதில் பள்ளியின் அர்ப்பணிப்பை மேலும் வெளிப்படுத்துகிறது. பாலாஸ்ரீ விருதை வென்றது, அதன் மாணவர்களிடையே படைப்பாற்றல், புதுமை மற்றும் சிறப்பை வளர்ப்பதில் பள்ளியின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.

எங்கள் நிகழ்வுகள்

விளையாட்டுகளும் விருதுகளும்

மாணவர்கள் மாநில அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு மாபெரும் பரிசுகளையும் உயரிய கோப்பைகளையும் பெற்று பெருமை சேர்த்துள்ளனர். இது அவர்களின் அர்ப்பணிப்பு திறனையும் கடுமையான பயிற்சித் திறனையும் விளையாட்டு ஆளுமை பண்பையும் வெளிப்படுத்துகிறது.

எங்கள் மதிப்புகள்

பொன்மனச் செம்மலின் பார்வையும் எமது பணியும்

எங்கள் நோக்கம்

டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் கனவை நினைவாக்கும் வண்ணம் டாக்டர் எம்ஜிஆர் பேச்சு மற்றும் காது கேளாதோர் இல்லம் மேல்நிலைப் பள்ளி ஆனது எம்ஜிஆர் தோட்டத்தில் 1990 ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் நாள் அன்று காஞ்சி காமகோடி பீடம் ஜகத் குரு சங்கராச்சாரியார் அவர்களின் முன்னிலையில் தொடங்கப்பட்டது . இப்பள்ளியானது மாணவர்களுக்கு உயர்தர கல்வியை வழங்குவதுடன் அவர்கள் நிறைவான வாழ்க்கையை நடத்துவதற்கும் வழி வகுக்கிறது.

எங்கள் பணி

மக்கள் திலகம் அவர்களின் எண்ணத்தின் ஏற்றமாய் பல்வேறு முயற்சிகளின் விளைவாய் அன்னை ஜானகி அம்மையார் திரு எம் சி ராகவாச்சாரி திரியும் ராஜேந்திரன் ஆகியோரின் முயற்சியால் இத்துறை சார்ந்த வல்லுனர்களின் அரிய ஆலோசனையின் அடிப்படையில் டாக்டர் எம்ஜிஆர் பேச்சு மட்டும் காது கேளாதோர் இல்லம் மேல்நிலைப்பள்ளி நிறுவப்பட்டது. மேற்குறிப்பிட்ட சான்றோர்களின் முயற்சியால் பள்ளியானது தனது பணியில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

வலிமையான பயணங்கள்

எங்கள் வெற்றி

டாக்டர் எம்ஜிஆர் பேச்சு மற்றும் காது கேளாதோர் இல்லம் மேல்நிலைப் பள்ளியானது செவித்திறன் மற்றும் பார்வை குறைபாடுள்ள மாணவர்களின் திறன்களை கண்டறிந்து அவர்களுக்கு வாய்ப்பு அளித்து பல சாதனைகள் புரிய துணை நின்று வருகிறது. இது மாணவர்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழி வகுக்கிறது.

சதவீதம்

எங்கள் பள்ளியில் பயிலும் 10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களை 100% தேர்ச்சி பெறச் செய்துள்ளோம்.

விளையாட்டு

மாணவர்கள் தன்னம்பிக்கையோடு பங்கு கொள்ளும் விதமாக பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்தியுள்ளோம்.

ஒற்றுமையின் வலிமை

எங்கள் பள்ளி ஒற்றுமை உணர்வு, ஒத்துழைப்பு, மரியாதை மற்றும் சமூகத்தின் வலுவான உணர்வை வளர்க்கிறது.

பாதுகாப்பான விடுதி

டாக்டர் எம்ஜிஆர் பேச்சு மற்றும் காது இயலாதவர் இல்லம் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்காக பாதுகாப்பான இடவசதியுடன் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் புரிந்து வருகிறது

எங்கள் இல்லத்தில் செவித்திறன் குறைபாடு உடைய மாணவர்களுக்கு ஒலிப்பதிவு பரிசோதனை வழக்கமாக செய்யப்பட்டு வருகிறது

டாக்டர் எம்ஜிஆர் பேச்சு மற்றும் காது கேளாதோர் இல்லம் மேல்நிலைப் பள்ளியானது இளநிலை  பட்டப் படிப்பிற்கான பயிற்சி மையமாகவும் செயல்பட்டு வருகிறது. 

 டாக்டர் எம்ஜிஆர் சிறப்பு கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் சிறப்புக் கல்வியியல் பயிலும் மாணவர்கள்,  டாக்டர் எம்ஜிஆர் பேச்சு மற்றும் காது கேளாதோர் இல்லம் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி ஆசிரியர்களாக செயல்பட்டு வருகின்றனர்.

நம் பள்ளியில் மேல்நிலைப் படிப்பை முடித்த செவித்திறன் குறைபாடுள்ள மாணவர்கள் பட்ட மேற்படிப்புப் படிக்கின்றனர் .

எங்கள் நிபுணர்களை சந்திக்கவும்

எங்கள் பள்ளியின் சிறந்த வல்லுநர்களின் முழுமையான அர்ப்பணிப்பு என்றென்றும் பிரதிபலிக்கும்.

DR.பிச்சை
பேராசிரியர் ரங்கசாயி
MR. மனோகரன்
DR.எஸ்.ஆர்.ரீட்டா மேரி
Scroll to Top