போட்டிகள் உள்ளார்ந்த ஆர்வத்தைத் தூண்டும். அந்த ஆர்வமே வெற்றியின் ஆயுதம்

இன்டெர்-ஹவுஸ் சாம்பியன்ஷிப் வீக்

செவித்திறன் குறையுடைய மாணவர்களுக்கு அரணாக விளங்கும் நமது பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் பள்ளியின், இயற்கை நிறைந்த அற்புத சூழலில் போட்டிகளுக்கு தயாராகுவது போல், விளையாட்டுத் தினத்திற்கு மாணவர்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். ஜூன் மாதம் 23/ 06/ 25 திங்கள் முதல் 27/06/ 25 வெள்ளி வரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. எங்கள் பள்ளி மாணவ குழுக்களான புரட்சித்தலைவர், பொன்மனச் செம்மல், மக்கள் திலகம் என மூன்று அணிகளுக்கிடையேயான விளையாட்டுகள் பின்வருமாறு.

Recent posts

 முதல் நாளான திங்கள் 23/06 /25 அன்று காலை 10 மணி அளவில் இறைவணக்கத்தோடு குத்துவிளக்கு ஏற்றப்பட்டு விளையாட்டுப்போட்டிகள் துவங்கப்பட்டன. இதனை முன்நின்று வழிநடத்த, மீனாட்சி கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர்               திருமதி. சங்கரி அவர்களும் அவரோடு அனுபவம் வாய்ந்த உடற்கல்வி ஆசிரியர் திருமதி பொன்னி அவர்களும் கலந்து கொண்டு மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.

இதில் ஆண்களுக்கான மட்டைப்பந்து (கிரிக்கெட்) போட்டியில் மக்கள் திலகம் அணி முதல் இடத்தை வென்றது. இரண்டாவது இடத்தை பிடித்தவர் பொன்மனச் செம்மல்.

இரண்டாம் நாளான செவ்வாய் 24 /06 /25 அன்று ஆண்கள் மற்றும் பெண்களுக்கான எறிபந்து (Throw ball) விளையாட்டில் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளில் பொன்மனச் செம்மலே முதலிடத்தைப் பிடித்தது. இரண்டாவது இடத்தில் ஆண்கள்  மற்றும் பெண்கள் அணிகளில் புரட்சி செம்மலே இரண்டாம் இடத்தை பிடித்தது.

மூன்றாம் நாளான புதன்கிழமை 25/06/ 25 அன்று கைப்பந்து (Volleyball) விளையாட்டில்  ஆண்கள் பிரிவில் பொன்மனச் செம்மலே முதலிடத்தை வென்றது. 

நான்காம் நாளான வியாழன் 26/06/25 அன்று ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கால்பந்து விளையாட்டில் ஆண்கள் பிரிவில் மக்கள் திலகம் அணியும் பெண்கள் பிரிவில் புரட்சித் தலைவர் அணியும் முதலிடத்தை வென்றது. இரண்டாம் இடத்தில் ஆண்களுக்கான பிரிவில் பொன்மனச் செம்மலும் பெண்களுக்கான பிரிவில் மக்கள் திலகமும் வெற்றி பெற்றுள்ளனர்

ஐந்தாம் நாளான வெள்ளிக்கிழமை 27/ 06/ 25  அன்று நடைபெற்ற ஆண்கள் மற்றும் பெண்கள்களுக்கான கபடி போட்டியில் ஆண்கள் பிரிவில் புரட்சித் தலைவர் முதலிடத்திலும் பெண்கள் பிரிவில் பொன்மனச் செம்மல் முதலிடத்திலும் உள்ளனர்.

 இரண்டாம் இடத்தில் ஆண்களுக்கான பிரிவில் பொன்மனச் செம்மலும் பெண்களுக்கான பிரிவில் மக்கள் திலகமும் இடம் பிடித்துள்ளனர்.

இவ்விளையாட்டுப் போட்டிகள் மாணவர்களுக்கு வெற்றிக்கனியைச் சுவைக்க பெரும் வாய்ப்பை ஏற்படுத்தியது. இதனால் தன்னம்பிக்கையோடு> உற்சாக வெள்ளத்தில் தழைக்கும் மாணவர்கள் சனிக்கிழமை 19/07/25 அன்று வரவிருக்கும் பள்ளி ஆண்டு விளையாட்டு தினத்தை எதிர்நோக்கி ஆர்வத்தோடு பயிற்சி செய்து வருகின்றனர்

புகைப்படங்கள்

Scroll to Top