ராமாபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடுடையோருக்கான இல்லம் மற்றும் மேல்நிலைப் பள்ளியில், 2026 ஜூலை 24 வெள்ளிக்கிழமை அன்று 36-வது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. InGage குழும நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான திரு. விஜய் கருணாகரன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அணிவகுப்பு, யோகா, சிலம்பம், ஓட்டப்பந்தயங்கள் மற்றும் தொடர் ஓட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இறுதியாக, இளம் விளையாட்டு வீரர்களின் சாதனைகளைப் பாராட்டிப் பரிசுகள் வழங்கப்பட்டன.
2026 செப்டம்பர் 22, செவ்வாய்க்கிழமை அன்று, Spring Board Tales சமூகப் பங்களிப்புத் திட்டத்தின் சார்பில் மாணவர்களுக்கான கதை சொல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. பொம்மைகள், கதை விளக்கப் பொருட்கள், பட அட்டைகள் மற்றும் நடிப்பின் மூலம் திருமதி. சௌமியா மற்றும் திருமதி. வாசுகி ஆகியோர் தூய்மை, பிறருக்கு உதவுதல், தன்னம்பிக்கையுடன் செயல்படுதல் மற்றும் இயற்கையுடன் இணைந்து வாழ்தல் போன்ற நல்ல பண்புகளை வலியுறுத்தும் கதைகளைப் பகிர்ந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சி மாணவர்களுக்கு மகிழ்ச்சியுடன் வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக்கொள்ளும் சிறந்த அனுபவமாக அமைந்தது.
தென்காசியில் நடைபெற்ற (55 கிலோ எடைப்பிரிவின்கீழ்) மாநில அளவிலான திறந்தவெளி கபடி போட்டியில் எங்கள் மாணவர்கள் குறைபாடில்லாத சாதாரண குழந்தைகளுடன் கலந்து கொண்டு போட்டியில் 5வது இடத்தைப்பிடித்தனர்
2024 டிசம்பர் 28 மற்றும் 29 ஆம் தேதியில் திருச்சியில் நடைபெற்ற ( 60 கிலோ எடை பிரிவின் கீழ்) மாநில அளவிலான கபடி போட்டியில் , எங்கள் மாணவர்கள் எவ்விதக் குறைபாடும் இல்லாத சாதாரண குழந்தைகளுடன் போய்ட்டியிட்டு வது இடத்தை பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
எங்கள் பள்ளியில் குடியரசு தின விழா சிறப்பாக நடைபெற்றது.
ஸ்ரீ மதுசூதன் சாய் மற்றும் பத்மவிபூஷண் டாக்டர். பத்மா சுப்ரமணியத்துடன் ஒரு மறக்கமுடியாத நாள், எங்கள் மனதையும் இதயத்தையும் வளப்படுத்துகிறது.
இராமபுரத்தில் இயங்கி வரும் டாக்டர் எம்.ஜி.ஆர் இல்லம் பேச்சு மற்றும் செவித்திறன் குறையுடையோர் மேல்நிலைப்பள்ளியானது அதன் நிறுவரான டாக்டர் எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஓவ்வோர்ர ஆண்டும் அவர்தம் பிறந்த நாளில் செவித்திறன்
நமது பள்ளியின் சிறந்த மாணவர்கள் பரிசுகளைப் பெறுகிறார்கள்.
21/08/25 அன்று எங்கள் பள்ளியில் கணிதம், பண்பாடு, அறிவியல் கோட்பாடுகளின் கண்காட்சி நடைபெற்றது. அதில் எம் பள்ளி மாணவர்கள் ஒவ்வொரு வகுப்பிலும் தலைப்புக் கேற்ற பொருட்கள், வரையேடுகள், செயல் மாதிரிகளை வைத்து காட்சிப்படுத்தி விளக்கினார்கள்.
செவித்திறன் குறையுடைய மாணவர்களுக்கு அரணாக விளங்கும் நமது பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் பள்ளியின், இயற்கை நிறைந்த…..
ஜூலை 19ஆம் தேதி, எங்கள் விளையாட்டு நாள் உற்சாகம் நிரம்பிய சூழலில் துவங்கியது. எங்கள் இளம் சாம்பியன்கள் தங்களின் சிறப்பான நிகழ்வுகளால் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தனர். நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் எங்கள் தலைமை விருந்தினராக திருமதி ஜவேரா ஷஹுனா அவர்களை வரவேற்றோம். உடற்கல்வி துறையில் அவரின் பயணம், எங்கள் மாணவர்களுக்கு சிறந்த ஊக்கமும் அனுபவமும் வழங்கியது.
மாவட்ட மற்றும் மாநில அளவிலான கலை நிகழ்ச்சி
மக்கள் திலகம் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் உன்னதமான தொலைநோக்கு சிந்தனையிலும் அவருடைய அளப்பிய கருணையிலும் உதித்தது டாக்டர் எம்.ஜி.ஆர் பேச்சு மற்றும் காதுகேளாதோர் இல்லம் மேல்நிலைப்பள்ளி.
எங்கள் நிறுவனம் காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீஜெயேந்தி சரஸ்வதி சுவாமிகள் மற்றும் சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களால் துவக்கிவைக்கப் பட்டது