கண்காட்சி நாள்

21/08/25 அன்று எங்கள் பள்ளியில் கணிதம், பண்பாடு, அறிவியல் கோட்பாடுகளின் கண்காட்சி நடைபெற்றது. அதில் எம் பள்ளி மாணவர்கள் ஒவ்வொரு வகுப்பிலும் தலைப்புக் கேற்ற பொருட்கள், வரையேடுகள், செயல் மாதிரிகளை வைத்து காட்சிப்படுத்தி விளக்கினார்கள்.

கண்காட்சி ரோபோக்கள், கணிதம், மரங்கள், நிலப்பரப்புகள், எண்கள், நீர் மற்றும் கழிவு மேலாண்மை, அளவீடுகள், நாட்டுப்புற கலைகள், இயற்கை மருத்துவம், இயற்பியல் போன்ற தலைப்புகளில் அமைக்கப்பட்டிருந்தன.

இக்கண்காட்சியினை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் கண்டு களித்தனர்

எங்கள் பள்ளியில் நடைபெற்ற இக்கண்காட்சியினை பார்வையிட தென் சென்னை மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு. குமார் அவர்கள், ரொட்டேரியன் சாரதா சுந்தரம், டாக்டர் எம். ஜி. ஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் முனைவர்.லட்சுமி பாலாஜி, பேராசிரியர் சாந்தி லட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு பார்வையிட்டு, மாணவர்களிடம் கலந்துரையாடி விளக்கங்களைக் கேட்டறிந்து பாராட்டும் தெரிவித்தார்கள்.

Scroll to Top